திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தல்


திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தல்
x

திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் இடைச்செருவாய் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் கருப்பையா(வயது 35), வைத்தியநாதபுரத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சுரேஷ்(25) என்பதும் ரேஷன் அரிசி கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 1 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் குடிமை பொருள் கடத்தல் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு கருப்பையா, சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story