சிவகாசி மாநகராட்சி 36-வது வார்டில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதியில் நடை பெற்ற பகுதி சபை கூட்டத்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1½ கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடக்க இருப்பதாக கவுன்சிலர் மகேஸ்வரி கணேசன் தெரிவித்தார்.
சிவகாசி,
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு பகுதியில் நடை பெற்ற பகுதி சபை கூட்டத்தில் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1½ கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடக்க இருப்பதாக கவுன்சிலர் மகேஸ்வரி கணேசன் தெரிவித்தார்.
பகுதி சபை கூட்டம்
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் நேற்று காலை பகுதிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத் துக்கு கவுன்சிலர் மகேஸ்வரி கணேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சிவகாசி மாநகராட்சி கவுன்சிலராக நான் தேர்வு பெற்று 8 மாதங்கள் ஆகிறது. இந்த 8 மாதங்களில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். அதில் குறிப்பாக ஓடைதெருவில் புதிய வாருகால் அமைத்தது, அதே பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது அதே போல் சேதமடைந்து கிடந்த என்.ஆர்.கே.ஆர். ரோட்டில் புதிய பேவர்பிளாக்கள் பதித்து உள்ளேன்.
மேயர் ஆய்வு
இதே போல் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதியில் புதிய பேவர்பிளாக் சாலைகள் அமைக்க வேண்டும் என மேயரிடம் கோரிக்கை வைத்தேன். அதனை தொடர்ந்து மேயர் சங்கீதா இன்பம், துணைமேயர் விக்னேஷ்வரி காளிராஜன், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் அதனை தொடர்ந்து 4 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு என ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிருதுமால் ஓடையை தூர்வார ரூ.20 லட்சம் நிதி ஒதுக்க எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சமுதாய கூடம்
இதே போல் அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் உள்ள காலி இடத் தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என்று அசோகன் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அந்த பணியை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். 4 இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்து கொடுக்க மாணிக்கம் தாகூர் எம்.பி. யிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அதற்கான நிதியை ஒதுக்கி தருவதாக தெரிவித்துள்ளார். இந்த வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எந்த பிரச்சினை என்றாலும் என்னை சந்தித்து தெரிவிக் கலாம். அந்த பிரச்சினை தீர தேவையான நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரி சித்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்த கவுன்சிலர் மகேஸ்வரிக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.