கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
x

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

2 அணுஉலைகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முதலாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

1 மாதம்

முதலாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாத காலம் நடைபெறும் என அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது அணுஉலையில் தொடர்ந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story