கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன


கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன
x

கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சிங்காரத்தோப்பு, மலைவாசல், சின்னகடை வீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை புனரமைக்கப்பட உள்ளது. நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் 3 நாட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சாலைகள் அடைக்கப்படும் என்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள சிங்காரத்தோப்பு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் பாதாள சாக்கடை புனரமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் கடைவீதி சாலைகள் திறக்கப்பட்டு, வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.


Next Story