செம்மரம் கடத்தல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
திருப்பத்தூர் அருகே செம்மரம் கடத்தல் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே புங்கம்பட்டுநாடு மலை கிராமத்தில் செம்மரக்கட்டை வெட்டுதல் மற்றும் கடத்துதல் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சேஷாசல வனப்பகுதிகளில் செம்மரக்கட்டைகளை வெட்டுவதற்காக இந்த கிராமத்தில் இருந்து இளைஞர்கள் சிலர் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவர்களை அழைத்துச் செல்லும் இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் போலீசார் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
கூட்டத்தில் போலீசார், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story