மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா
அருணாபேரியில் மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் அன்று குற்றால தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமத்துடன் சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், மண்ணால் செய்யப்பட்ட குதிரையில் சாஸ்தா ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி அருணாப்பேரி வந்தனர். அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின் மேளதாளத்துடன் ஊர்வலமாக மரத்தடி மேகம் திரைகொண்ட சாஸ்தா கோவிலை வந்தடைந்தது. இரவில் சாமக்கொடை, வில்லிசை, கச்சேரி, பட்டிமன்றம், கரகாட்டம் நடைபெற்றது.
2-வது நாள் சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொங்கல் இடுதல் மற்றும் கிடா வெட்டுதல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.