வணிகவியல் கருத்தரங்கம்
வணிகவியல் கருத்தரங்கம் நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக மன்ற விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் அடைக்கல ராஜா வரவேற்றார். முதல்வர் (மேஜர்) து.ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர் வேதா. எம்.விஜயகுமார் கலந்துகொண்டு நிதி மேலாண்மை என்ற பொருண்மையில் கருத்துக்களை எடுத்துரைத்தார். இணையதளம் வரமா? சாபமா? என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை துறைத் தலைவர் மனோகர் செய்திருந்தார். முடிவில் மாணவி இ.தங்கமரியாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story