செல்வக்குமார சுவாமி கோவில் மண்டலாபிஷேகம்


செல்வக்குமார சுவாமி கோவில் மண்டலாபிஷேகம்
x

செல்வக்குமார சுவாமி கோவில் மண்டலாபிஷேகம் நடந்தது.

கரூர்

சின்னதாராபுரம் அருகே புள்ளாக்கவுண்டம் பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்வக்குமார சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், விநாயகர், குப்பண்ண சுவாமி, அத்தனூரம்மன், மகாமுனி ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேலைகளில் மண்டலாபிஷேக பூஜை நடந்தது. கடந்த 21-ந்தேதி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு செல்வக்குமாரசாமி உள்பட பரிவார தெய்வங்களுக்கும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு பால், மஞ்சள், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில், புள்ளாக்கவுண்டம் பாளையம் குடிப்பாட்டு மக்கள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை புள்ளாக்கவுண்டம் பாளையம் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள், குடிப்பாட்டு மக்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story