செல்லி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா


செல்லி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா
x

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு நகர் முக்குலத்தோர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஐப்பசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு நகர் முக்குலத்தோர் சங்கம் சார்பில் முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் செல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் பல்வேறு வகையான போட்டிகளும் நடைபெற்றன. மேலும் செல்லி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து முதுகுளத்தூர் தேவர் மகால் அருகில் உள்ள முளைக்கட்டு திண்ணையில் இருந்து காந்தி சிலை பஸ் நிலையம் வழியாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் கோவிலுக்கு முளைப்பாரியுடன் வந்தனர். பின்பு செல்லி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்பட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முளைப்பாரியை சங்கர பாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாட்டினை நகர் முக்குலத்தோர் சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர


Related Tags :
Next Story