மாணவர்களுக்கான அறிவியல் பரிசோதனைகள் தேர்வு
துறையூர் வட்டார அளவில் மாணவர்களுக்கான அறிவியல் பரிசோதனைகள் தேர்வு நடைபெற்றது.
திருச்சி
துறையூர் ஒன்றியத்தில் வானவில் மன்றத்தின் சார்பாக அறிவியல் சார்ந்த போட்டிகள் வட்டார கல்வி மையத்தில் நடைபெற்றது. துறையூர் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் தலைமை தாங்கினார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர்புகழேந்தி முன்னிலை வகித்தார். நடுவலூர் தலைமைஆசிரியர் நளினா அறிவியல் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பிப்ரவரி மாத கருப்பொருளான காற்றழுத்தம், வெப்பம், வேதிவினைகள் தொடர்பான தலைப்புகளில் 6-ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்மாறன் நடுவராக செயல்பட்டார். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் ராஜசேகர் நன்றி கூறினார்
Related Tags :
Next Story