அறை கண்காணிப்பாளர் தேர்வு
அரூரில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் தேர்வு குலுக்கல் முறையில் நடந்தது.
தர்மபுரி
அரூர்
அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரூர் ஆண்கள் பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட 24 மையங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இங்கு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதையொட்டி அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அவர்களுக்கான பள்ளிகள் ஒதுக்கீடு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபாலன் முன்னிலையில் கல்வி அலுவலர்கள் ராகவேந்தர், செந்தமிழ்செல்வன், பன்னீர் ஆகியோர் பணி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story