ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 லாரிகள் பறிமுதல்
பாலக்கோட்டில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாலக்கோடு
பாலக்கோட்டில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 2 லாரிகளை நிறுத்தி பரிசோதனை செய்தனர்.
அதில் வாகன வரி செலுத்தாமலும், ஓட்டுனர் உரிமம் இன்றியும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் லாரிகளை இயக்கியது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பாலக்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அபராதம்
இந்த 2 லாரிகளுக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது செயலாக்க பிரிவு மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.