2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கோவை-குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் அதிக அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்து போது, ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் 45 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் மொத்தம் 2,700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெபஸ்டின் (வயது 23) என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.