இலவச வீட்டுமனை பட்டா இடத்தை அளக்க கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலைமறியல்


இலவச வீட்டுமனை பட்டா இடத்தை அளக்க கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலைமறியல்
x

இலவச வீட்டுமனை பட்டா இடத்தை அளக்க கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலைமறியல்

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புஞ்சை காளமங்கலம் ஊராட்சி இந்திரா காந்திபுரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு 15 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 6 பேருக்கு கொடுக்கப்பட்ட இடம் மட்டும் அளந்து தரப்படவில்லை. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பட்டா தாரர்களுக்கு வழங்கப்பட்ட உரிய இடத்தை அளந்து தர தாசில்தார் அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து இடத்தை அளந்து கொடுக்க கிராம நிர்வாக அதிகாரி சாம்சன் ஜார்ஜ், வருவாய் ஆய்வாளர் அமிர்தலிங்கம் மற்றும் உதவியாளர்களுடன் இந்திரா காந்திபுரத்துக்கு சென்று அங்குள்ள இடத்தை நேற்று அளவீடு செய்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எங்களுக்கு உரிய இடத்தை அளந்து தர வேண்டும் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் புஞ்சை காளமங்கலம் ஊராட்சி தலைவர் உதயசூரியன், துணைத்தலைவர் சரவணன் மற்றும் மலையம்பாளையம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story