பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருபதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 19).

இவருக்கும் நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் மகி என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சூர் அருகே சாமுண்டீஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கீர்த்தனாவுடைய தந்தை கிருபதாஸ் தன்னுடைய மகளை காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கீர்த்தனா இன்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் கணவனுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

பின்னர் போலீசார் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர்.

அப்போது இருவரும் மேஜர் என்பதால் காதல் திருமணம் செய்து கொண்டனர் எனகூறி காதல் கணவனுடன் கீர்த்தனாவை அனுப்பி வைத்தனர்.


Next Story