வாரச்சந்தையில் மாட்டு இறைச்சிக்கடை வைக்க அனுமதி கோரிபுஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்


வாரச்சந்தையில் மாட்டு இறைச்சிக்கடை வைக்க அனுமதி கோரிபுஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
x

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் இறைச்சிக்கடை வைக்க அனுமதி கோரி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் இறைச்சிக்கடை வைக்க அனுமதி கோரி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தையில் செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சிக்கடைகளை அகற்றிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் வாரச்சந்தையில் மாட்டு இறைச்சிக்கடை வைக்க அனுமதி கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற குடியேறும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில உதவித்தலைர் யூ.கே.சிவஞானம் ஆகியோர் தலைமையில் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தரையில் உட்கார்ந்து...

பின்னர் நகராட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலக வளாகத்தில் சமைக்க தொடங்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் சையது உசேன், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து வியாழக்கிழமை (அதாவது நாளை) பேசி முடிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இரவு 10 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story