எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பேட்டை:

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தியும், உத்தரபிரதேசத்தில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வீடுகளை இடிக்கும் யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்தும் பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு நெல்லை சட்டமன்ற தொகுதி தலைவர் முகம்மது அசனார் தலைமை தாங்கினார், நெல்லை தொகுதி மற்றும் பகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், தொகுதி இணை செயலாளர் ரிபாயி வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நேஷனல் விமன்ஸ் பிரண்டின் மாவட்ட தலைவர் ஜன்னத் ஆலிமா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, பொது செயலாளர் பர்கிட் அலாவுதீன், செயலாளர் ஜவுளி காதர், பொருளாளர் முகம்மது காசிம், தொகுதி நிர்வாகிகள் ஜெய்லானி, பயாஸ், தாவுத்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், தொகுதி செயலாளர் முகமது கவுஸ் நன்றி கூறினார்.


Next Story