தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
x

களக்காடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே வடக்கு மீனவன்குளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் வண்டிசெல்வன் (வயது 22). கட்டிட தொழிலாளியான இவர் அப்பகுதியைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் முத்துவிடம் (22) ரூ.8 ஆயிரத்திற்கு ேமாட்டார் சைக்கிளை வாங்கினார். இதற்காக ரூ.4 ஆயிரத்தை முத்துவிடம் கொடுத்த வண்டிசெல்வன் மீதி பணத்தை வழங்கவில்லை. இதனால் முத்து, வண்டிசெல்வனிடம் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று விட்டார். மேலும் வண்டிசெல்வனிடம் வாங்கிய ரூ.4 ஆயிரத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வண்டிசெல்வன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து அவதூறாக பேசி வண்டிசெல்வனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வண்டிசெல்வனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் வழக்குப்பதிவு செய்து, முத்துவை கைது செய்தார்.


Next Story