தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
x

கூடங்குளத்தில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

கூடங்குளம்:

கூடங்குளம் கோவிந்தன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணபெருமாள் மகன் சுரேஷ் (வயது 45). கூலித்தொழிலாளி. பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணி என்பவர் மகன் அசோக் (36). இருவரும் மது போதையில் வடக்கு தெரு அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மது போதையில் ஏற்பட்ட வாய் தகராறில் வடக்கு தெருவை சேர்ந்்த பாண்டி மகன் முத்துக்குமார் (31) அரிவாளால் சுரேசை வெட்டியுள்ளார். இதில் சுரேஷ் காயம் அடைந்து கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story