தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
திருநெல்வேலி
பேட்டை:
பேட்டை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அழகுமலை மகன் நந்தீஸ்வரன் (வயது 22). கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் நின்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். படுகாயம் அடைந்த நந்தீஸ்வரன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், நில அபகரிப்பு இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். நந்தீஸ்வரன் புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story