முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
கெலமங்கலம் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து;போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள யு.புரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் பிரசாந்த் (வயது 18). தச்சுத்தொழிலாளி. இவரை சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்த முனிராஜ் (35) என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த பிரசாந்தை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முனிராஜை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story