வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவருக்கு கத்திக்குத்து


வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவருக்கு கத்திக்குத்து
x

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வகுப்பறை பெஞ்சில் உட்காருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டம் குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது வகுப்பறையில் ஏற்கனவே 4 பேர் அமர்ந்திருந்த பெஞ்சில் 5-வது ஆளாக அந்த மாணவர் அமர்ந்துள்ளார்.

பெஞ்சில் போதிய இடம் இல்லாமல் இறுக்கமாக இருந்ததால் கொடநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் ஏன் இங்கே அமருகிறாய்? எனக் கேட்டதாக தெரிகிறது.

அப்போது கொடநகர் மாணவருக்கும், குத்தனூர் மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கொடநகர் மாணவர், குத்தனூர் மாணவருடைய முகத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இதுகுறித்து குத்தனூர் மாணவர், அதே கிராமத்தைச் சேர்ந்த நண்பரும் அக்கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவரிடம் கூறினார். இன்று கல்லூரிக்கு வந்த குத்தனூரை சேர்ந்த மற்றொரு மாணவர், எனது நண்பரான பொருளியல் படிக்கும் மாணவரை தாக்கியவர் யார்? என விசாரித்தார்.

அதற்கு கொடநகர் மாணவர், நான் தான் தாக்கினேன், எனப் பதில் அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த குத்தனூரை சேர்ந்த மற்றொரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் கொடநகர் மாணவரை குத்தினார். அதில் படுகாயம் அடைந்த அவர் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story