ஆதித்தனார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி:அனிதா குமரன் பள்ளி மாணவர்கள் சாதனை


ஆதித்தனார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி:அனிதா குமரன் பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 1 Sept 2023 12:15 AM IST (Updated: 1 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் அனிதா குமரன் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நெகிழிப்பை கழிவுகளை மேம்படுத்தும் நுணுக்க திறன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பல்வேறு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். தொழில்நுட்ப திறனைப் பயன்படுத்தி நெகிழிக் கழிவுகளை எரிப்பதின் மூலம் மின்சாரம், தார் சாலை போடுவது குறித்த செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் செயல்விளக்கம் மூலம் காட்சி படுத்தினர்.

இதில் தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவர்கள் சி. கிருஷ்ணா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குபெற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இவர்களுக்கு ஆதித்தனார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த மாணவர்களை பள்ளி ஆலோசகர் பேராசிரியர் தி.ஆழ்வார், முதல்வர் சோ.மீனா நிர்வாக அதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்தி ஜெய ஸ்ரீ மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story