இன்று பள்ளிகள் திறப்பு: பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு


இன்று பள்ளிகள் திறப்பு: பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
x

இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

அரியலூர்

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரியலூர் மாவட்ட பள்ளி விடுதிகளில் தங்கி படித்த மாணவ-மாணவிகள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். மேலும் மாணவ-மாணவிகள் சிலர் கோடை விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றிருந்தனர். அவர்கள் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் மீண்டும் சொந்த ஊரில் இருந்து பெற்றோருடன் நேற்று புறப்பட்டனர். மேலும் வெளியூரில் தங்கியிருந்து வேலைக்கு செல்பவர்கள் நேற்று விடுமுறை முடிந்து வேலை செய்யும் இடத்திற்கு புறப்பட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. சில பஸ்களில் அமர இருக்கை இல்லாமல் தொலை தூரத்திற்கும் பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர்.


Next Story