தேசிய கொடிகளால் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை உருவாக்கி பள்ளி மாணவி சாதனை
தேசிய கொடிகளால் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை உருவாக்கி பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
திருச்சி
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டியும், சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டியும் திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி சாய்னா நேற்று சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சாய்னா, குழந்தைகள் பாதுகாப்பு எண்ணான 1,098-ஐ தேசிய கொடிகளை கொண்டு உருவாக்கினார். இதில் 100 தேசிய கொடிகளை பயன்படுத்திய அவர் 7 நிமிடங்களில் 1098 என்ற எண்ணை உருவாக்கி சாதனை படைத்தார். குழந்தைகளின் பாதுகாப்பு எண்ணான இந்த எண்ணை பிரபலப்படுத்தும் வகையிலும், இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. சாய்னா ஏற்கனவே பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story