சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,450-க்கு ஏலம்


சத்தியமங்கலம் மார்க்கெட்டில்   மல்லிகைப்பூ கிலோ ரூ.2,450-க்கு ஏலம்
x

மல்லிகைப்பூ

ஈரோடு

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 450-க்கு ஏலம் போனது.

ஏலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

மல்லிகைப்பூ கிலோ ரூ.2,450

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 450-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.34-க்கும், பட்டுப்பூ ரூ.79-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.650-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 240-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.800-க்கும், செண்டுமல்லி ரூ.35-க்கும், பட்டுப்பூ ரூ.100-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.510-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தை விட மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.210-ம், கனகாம்பரம் ரூ.140-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. கடந்த 8-ந் தேதி முதல் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை ஆகி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story