சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்வு
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயா்ந்தது
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை உயர்ந்தது.
மல்லிகைப்பூ ரூ.1,180
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 6 டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,180-க்கும், முல்லை ரூ.720-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.130-க்கும், பட்டுப்பூ ரூ.110-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.240-க்கும், சம்பந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது.
பூக்கள் விலை உயர்வு
இதேபோல் நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,000-க்கும், முல்லை ரூ.520-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.98-க்கும், பட்டுப்பூ ரூ.105-க்கும், சாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.1,010-க்கும், அரளி ரூ.450-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.240-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.180-ம், முல்லைப்பூ ரூ.200-ம், செண்டுமல்லி ரூ.32-ம், பட்டுப்பூ ரூ.5-ம், சம்பங்கி ரூ.20-ம் உயர்ந்திருந்தது.
கனகாம்பரம் ரூ.10-ம், அரளி ரூ.100-ம், செவ்வந்தி ரூ.40-ம் விலை குறைந்திருந்தது. இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கூறும்போது, 'ஆயுத பூஜை என்பதால் மல்லிகை பூ, முல்லை, அரளி ஆகிய பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்' என்றனர்.