பிரிதிவிமங்கலத்தில் தூய்மைப்பணி
பிரிதிவிமங்கலத்தில் தூய்மைப்பணி உதவி இயக்குனர் ரத்தினமாலா ஆய்வு
கண்டாச்சிமங்கலம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் வருகிற அக்டோபர் 2-ந்தேதி வரை தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கரீம்ஷாதக்கா பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதற்கு உதவி திட்ட இயக்குனர்(வீடு மற்றும் சுகாதாரம்) ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி வரவேற்றார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா தலைமை தாங்கி தூய்மை பணியில் பங்கேற்று, பணிகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அனைத்து கிராமங்களையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும். மேலும் நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சி வேலு, சங்கர், உதவி பொறியாளர் கோபி, வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகன், கூடுதல் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிஷா, ஊராட்சி மன்ற துணை தலைவர் மத்தின், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர்.