சாம்பவர்வடகரை ராமசாமி கோவில் தேரோட்டம்


சாம்பவர்வடகரை ராமசாமி கோவில் தேரோட்டம்
x

சாம்பவர்வடகரை ராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

தென்காசி

சுரண்டை:

சாம்பவர் வடகரை ராமசாமி கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 10-ம் திருநாளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர் ரதத்தில் சீதா பிராட்டியார் சமேத ராமசாமி எழுந்தருளினர். 3 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பட்டு 4 ரத வீதிகள் வழியாக சென்று இரவு 7 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நேற்று இரவு 7 மணிக்கு பூ வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடந்தது. விழா ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்து இருந்தனர்.


Next Story