ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x
தினத்தந்தி 24 Nov 2022 1:00 AM IST (Updated: 24 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.18½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 2,687 கிலோவாக அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.780- க்கும், குறைந்தபட்சமாக ரூ.562-க்கும், சராசரியாக ரூ.693.48-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.18 லட்சத்து 63ஆயிரத்து 379 மதிப்பில் பட்டுக் கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.


Next Story