பழனியில், இன்று இறைச்சி விற்க தடை


பழனியில், இன்று இறைச்சி விற்க தடை
x
தினத்தந்தி 5 Feb 2023 12:30 AM IST (Updated: 5 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், இன்று இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்


பழனி நகராட்சி ஆணையர் கமலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


வள்ளலார் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோழி, ஆடு, மீன், மாடு போன்ற மிருகங்களை வதை செய்வதும், அதன் இறைச்சி விற்கவும் அரசு தடை விதித்துள்ளது. எனவே பழனி நகர் பகுதியில் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட அனைத்து இறைச்சி கடைகள் இன்று மூட வேண்டும். அதேபோல் நகராட்சி ஆட்டிறைச்சி கூடமும் செயல்படாது. அரசின் உத்தரவை மீறி யாரேனும் இறைச்சி விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story