தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை


தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
x

தேனி கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது

தேனி

தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு தங்கப் பத்திரம் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. அதன்படி தேனி கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. ஒரு தனிநபர் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.5,109 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத ஆண்டு வட்டி, 6 மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் 8 ஆண்டுகளுக்கு பிறகு, அன்றைய 24 கேரட் தங்கத்தின் மதிப்புக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story