அக்னி நட்சத்திர நிறைவு நாளையொட்டி முருகன் கோவிலில் ருத்ராபிஷேக விழா
அக்னி நட்சத்திர நிறைவு நாளையொட்டி முருகன் கோவிலில் ருத்ராபிஷேக விழா நடந்தது.
திருவண்ணாமலை
ஆரணி
அக்னி நட்சத்திர நிறைவு நாளையொட்டி முருகன் கோவிலில் ருத்ராபிஷேக விழா நடந்தது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி நேற்று நிறைவு பெற்றதையொட்டி ஆரணி, ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ரத்ராபிஷேகம் நடந்தது.
இதற்காக கோவிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள், சங்குகளில் புனித நீர் நிரப்பியும் ருத்ராபிஷேகம் விழா கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க 2 கால யாக ஹோம பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கும், வள்ளி தெய்வானைக்கும் புனித நீர் ஊற்றி ருத்ராபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story