ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி


ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x

மாநில தலைமைக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும், காங்கிரசில் ஜனநாயகம் இருப்பதால்தான் உடனடி தீர்வு கிடைத்து உள்ளது என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்

திருநெல்வேலி

மாநில தலைமைக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும், காங்கிரசில் ஜனநாயகம் இருப்பதால்தான் உடனடி தீர்வு கிடைத்து உள்ளது என்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டி

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக பார்க்க முடிகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, மாநில நிகழ்வுகளை கவனிக்கவில்லை என பலர் வீண்பழி சுமத்துவார்கள். ஆனால் நேற்றைய (அதாவது நேற்று முன்தினம்) சம்பவம் மூலம் அது துடைத்து எறியப்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டனுக்கு காலையில் கிடைத்த தண்டனையை அகில இந்திய காங்கிரஸ் தலைமை மாலையிலேயே தீர்த்து வைத்து மாபெரும் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வணங்குகிறேன்

அகில இந்திய காங்கிரஸ் தலைமை மூலம் எனது இடைநீக்கத்தை நிறுத்தி வைத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை வணங்குகிறேன். இதேபோல் அகில இந்திய தலைமைக்கு இந்த பிரச்சினையை உடனடியாக தெரியப்படுத்தி நடவடிக்கை எடுத்த பொதுச்செயலாளர் வேணுகோபாலையும் வணங்குகிறேன்.

நாங்குநேரி தொகுதியில் மக்கள் பணி செய்வது மனநிறைவை தருகிறது. உயிர் உள்ள வரை மக்களுக்காகவும், கட்சிக்காகவும் பொறுப்புடன் பணி செய்வேன்.

ஜனநாயகம்

அகில இந்திய காங்கிரஸ் தலைமை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி, என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்வேன். என் உயிர் பிரியும் வரை காங்கிரசில்தான் இருப்பேன். என் வாழ்க்கை முழுவதையும் காங்கிரசுக்காக அர்ப்பணித்து விட்டேன்.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருப்பதால் தான் உடனடி தீர்வு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story