ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிறப்பு பண்பு பயிற்சி முகாம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சிறப்பு பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ். முதலாமாண்டு சிறப்பு பண்பு பயிற்சி முகாம் இலுப்பூரில் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை நடைபெறும் இம்முகாமை திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன செயலாளர் சத்யானந்த மஹராஜ் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். வட தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் ஜெகதீசன் முகாம் செயல்பாடுகள் குறித்து பேசினார். தென் தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். இணைச்செயலாளர் சுப்பிரமணியன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், நோக்கம் குறித்தும், பண்பு பயிற்சி முகாமின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பல கட்ட பயிற்சிகள் உள்ளன. இதில் முதலாம் ஆண்டு சிறப்பு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு விளையாட்டு, யோகா, சிலம்பம், இந்திய வரலாறு, இந்து மதத்தின் கோட்பாடுகள், இந்து மதத்தை வளர்த்த மகான்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு, அரும்பணிகள், அதன் லட்சியம், கடந்து வந்த பாதை ஆகியவை குறித்து ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் 50 பேர் பயிற்சி அளிக்கின்றனர்.