சாலை புதுப்பிக்கும் பணி
ஏரல்-ஆறுமுகமங்கலம் இடையே ரூ.1.99 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி
ஏரல்:
ஏரலில் இருந்து தேவி நட்டார் கொண்ட அம்மன் கோவில் வழியாக ஆறுமுகமங்கலம் செல்லும் சாலையை ரூ.1.99 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கொடியசைத்து சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராயப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, ஏரல் நகர தலைவர் பாக்கர் அலி, ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் கணேசன், சாலை ஆய்வாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story