தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்

தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது தகவல்களை பெறுவதற்கு மட்டுமல்ல மக்களின் குறைகளை களைவதற்கு ஒரு நுழைவுவாயிலாக அமைகிறது என்பதனை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, கைத்தறித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று நடத்தியது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து திண்ணப்பா கார்னர் வழியாக கரூர் பஸ் நிலையம், சென்று திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் கைத்தறி உதவி இயக்குனர் சரவணன், அரசு கேபிள் தாசில்தார் வித்யாவதி, கைத்தறி அலுவலர்கள் கண்மணி, சத்யபிரியா, அரசு அலுவலர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கைத்தறி நெசவாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story