மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் ேமாதல்; தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் ேமாதல்; தொழிலாளி பலியானார்.
கீரனூர் அருகே வாலியம்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஒடுகம்பட்டியிலிருந்து வாலியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக செல்லத்துரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்லத்துரை படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்லத்துரையை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் பெருங்களூர் சொக்கநாதம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (46) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.