நெல் அறுவடை பணிகள் தீவிரம்


நெல் அறுவடை பணிகள் தீவிரம்
x

வத்திராயிருப்பு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் கான்சாபுரம், அத்திகோவில், வ.புதுப்பட்டி, சேது நாராயணபுரம், எஸ்.கொடிக்குளம், நெடுங்குளம், ரஹமத் நகர், சுந்தரபாண்டியம், மாத்தூர், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கோடை நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்ேபாது இந்த நெல்லானது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நல்ல விளைச்சல்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் நெல்லை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளோம்.

தொடர் மழையின் காரணமாகவும் நீர்நிலைகளில் நீர் இருப்பு காரணமாகவும் தற்போது கோடை விவசாயத்தினை வெற்றிகரமாக நடவு செய்து அறுவடை தொடங்கியுள்ளோம். இந்த கோடை அறுவடையில் நெல் நன்கு விளைந்து உள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்த படி ஏக்கருக்கு 30 முதல் 35 மூடைகள் வரை மகசூல் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபமும் கிடைக்கும்.

அறுவடை பணிகள்

வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கால தாமதம் இன்றி திறக்க வேண்டும்.

அதேபோல அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story