நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் பிள்ளை தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மனோகர் ஜஸ்டஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


Next Story