புதுச்சேரியில் இடஒதுக்கீடு: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி -ராமதாஸ் டுவிட்டர் பதிவு


புதுச்சேரியில் இடஒதுக்கீடு: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி -ராமதாஸ் டுவிட்டர் பதிவு
x

புதுச்சேரியில் இடஒதுக்கீடு: பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசிதழ் பதிவு இல்லாத பி பிரிவு பணிகளுக்கும் இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் புதுவையில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி சரி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இதற்காக பா.ம.க. தான் தொடர் போராட்டங்களை நடத்தியது. நானே களமிறங்கி போராடுவேன் என்று எச்சரித்திருந்தேன். அதன் பயனாக இடஒதுக்கீடு மீண்டும் கிடைத்துள்ளது. இது பா.ம.க.வின் வெற்றி.

அனைத்துப்பிரிவு அரசுப்பணிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. இதை உணர்ந்து ஏ பிரிவு மற்றும் அரசிதழ் பதிவு பெற்ற பி பிரிவு பணிகளுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும். அது குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story