ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி எலும்புக்கூடாக மீட்பு


ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி எலும்புக்கூடாக மீட்பு
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தொழிலாளி எலும்புக்கூடாக மீட்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு பூந்தோப்பு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சங்கர்(வயது 36). தொழிலாளியான இவர் கடந்த 16.11.2021 அன்று மதியம் 2 மணியளவில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக தனது வீட்டின் பின்புறமுள்ள மலட்டாற்று பகுதிக்கு சென்றார். அப்போது அந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அவர், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதுகுறித்து அவரது மனைவி கெஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு காணாமல்போன சங்கரை, மலட்டாற்றின் பல்வேறு பகுதிகளிலும் தேடினர். இருப்பினும் அவரது உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் கொங்கம்பட்டு மலட்டாற்று பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் மணலில் புதைந்த நிலையில் மனித எலும்புக்கூடு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றிய தகவலின்பேரில் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கெஜலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் விரைந்து வந்து ஆள் அடையாளம் காட்டியதோடு எலும்பு கூடுகளை பார்த்து கெஜலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story