கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு


கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் விழுந்து பசுமாடு மீட்கப்பட்டது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே மருக்காலங்குளம் ஊரைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது கிணறு ஊருக்கு கீழ்பக்கம் உள்ளது. அவரது கிணற்றிற்கு அருகில் கட்டி இருந்த பசுமாடு தவறி கிணற்றில் விழுந்து விட்டது.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


Related Tags :
Next Story