கோடாலிகருப்பூர் கொள்ளிடம் நடுத்திட்டில் சிக்கியிருந்த 25 மாடுகள் மீட்பு


கோடாலிகருப்பூர் கொள்ளிடம் நடுத்திட்டில் சிக்கியிருந்த 25 மாடுகள் மீட்பு
x

கோடாலிகருப்பூர் கொள்ளிடம் நடுத்திட்டில் சிக்கியிருந்த 25 மாடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 100-க்கும் மேற்பட்ட மாடுகள் சிக்கியதாக கூறப்படுகிறது. அவற்றில் 2 மாடுகள் மட்டும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தானாகவே கரையேறி வந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் அந்த மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்தது.

தீயணைப்பு வீரர்கள் நேற்று மீண்டும் மிதவை படகு மூலம் மாடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 25 மாடுகளை மீட்டு ஓட்டி வந்தனர். அந்த மாடுகள் கோடாலிக்கருப்பூர் கொள்ளிடக்கரையில் ஏறின. நடுதிட்டு பகுதியில் மேலும் எத்தனை மாடுகள் உள்ளன என்பது தெரியவில்லை. இதற்கிடையே நேற்று மாலை இருள் சூழ்ந்ததால் தீயணைப்பு வீரர்கள் கரை திரும்பினர். 25 மாடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டதை அறிந்த அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story