கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் முன்பதிவு கவுன்ட்டர்களை திறக்க கோரிக்கை
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் முன்பதிவு கவுன்ட்டர்களை திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தெய்வேந்திரன், ெரயில் நிலைய அதிகாரி ராஜேஷை சந்தித்து மனு கொடுத்தார். அதில், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி ஆகிய இரு மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நகரமாக கோவில்பட்டி உள்ளது. இங்கு இருக்கும் மக்கள் வெளியூர் செல்வதற்கு கோவில்பட்டி ெரயில் நிலையத்தையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ெரயில் நிலையத்தில் இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர்களில் ஒரே நேரத்தில் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் நடைமுறை உள்ளது. இதனால் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து உடனடியாக பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாமல் ெரயிலில் ஏற முடியாத நிலை உருவாகிறது.
எனவே முன்பு இருந்ததை போல முன்பதிவு செய்ய வருபவர்களுக்கு தனி கவுன்ட்டர்களும், முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க வரும் பயணிகளுக்கு தனி கவுன்ட்டர்களும் அமைக்கப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.