காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னையில், ஜூன் 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்


காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பக்கோரி  சென்னையில், ஜூன் 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
x

காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னையில், ஜூன் 24-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

கரூர்

கரூர்

கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் சார்பில் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கவுரவத்தலைவர் சக்திவேல் வரவேற்று பேசினார். இதில், மருந்தாளுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் நீண்ட நாட்களாக 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் மாதம் 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில், அனைத்து மருந்தாளுனர்களும் அறவழியில் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது, என்றார்.


Next Story