காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்


காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

காவிரி கூட்டுக் குடிநீா்

திருச்சி முத்தரசநல்லூரிலிருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் திருப்பத்தூர் வழியாக ராமநாதபுரம் வரை குழாய் பதித்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை சாலை புதுப்பட்டி பகுதியில் உள்ள சங்கிலியான் கோவில் அருகே குழாயில் நேற்று முன்தினம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அந்த குழாயில் இருந்து 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சியடித்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. மேலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது.

சீரமைப்பு பணி தீவிரம்

இது குறித்து தகவல் அறிந்ததும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் வழியே ராமநாதபுரத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். இதையடுத்து குழாய் உடைந்த இடத்தில் குடிநீர் வடிகால் அதிகாரிகள் எந்திரத்தின் உதவியோடு குழாயை அடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இது குறித்து குடிநீர் வடிகால் அதிகாரிகள் கூறும் போது, குழாய் உடைப்பால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீர் வினியோகிப்பது பாதிக்கப்பட்டது. தற்போது குழாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி நிறைவு பெற்றதும் குடிநீர் வினியோகம் வழக்கம் போல தொடரும் என்றனர்.


Next Story