பெரிய மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடங்கின.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தொடங்கின.
பெரிய மாரியம்மன் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1997-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் தொடங்க உத்தரவிட்டது. தொடர்ந்து கட்டிடப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகள் தொடக்கம்
இந்த திருப்பணிகளுக்கான பூஜைகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. இந்த கோவிலில் உள்ள தேர், கோவிலில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டி ஆகியவை வி.பி.எம். கல்வி அறக்கட்டளை சார்பில் சீரமைத்து உள்ளனர். மேலும் உபயதாரர்கள் உதவியுடன் கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், துணைத்தலைவர் செல்வமணி, கோதையூர் மணியன், கோவில் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி செய்திருந்தார்.