விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்


விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்
x

விழுப்புரம் நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி இந்த விளம்பர பதாகைகளை வைத்துள்ளதாகவும், சாலை விபத்துகள் ஏற்பட இதுவே காரணமாக அமைவதாகவும் பொதுமக்கள் தரப்பில் இருந்து மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இதையடுத்து நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் அனைத்து விளம்பர பதாகைகளையும் உடனடியாக அகற்றும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விழுப்புரம் புதிய பஸ் நிலைய பகுதிகள், திருச்சி நெடுஞ்சாலை, நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, ரெயில்வே மேம்பாலம், கிழக்கு புதுச்சேரி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டுமின்றி தனியார் பள்ளி- கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், கடைகளின் சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அனைத்தையும் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.


Next Story