போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 300 வழக்குகள் பதிவு


போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக  300 வழக்குகள் பதிவு
x

நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு அன்று இரவு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு அன்று இரவு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

வாகன விதிமீறல்

நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு அன்று அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 700-க்கும் அதிகமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மக்கள் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் புத்தாண்டு அன்று இரவில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மாநகர போலீஸ்

நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். நெல்லை பாளையங்கோட்டை, மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.


Next Story